America status
7 ஆண்டில் முதன் முறையாக பரபரப்பு அமெரிக்க கஜானா காலி
கருத்துகள்
Virat Kohli at Soha Ali Khan's part...
கடந்த 1996 ல் தான் இப்படி அசாதாரண நிலை ஏற்பட்டது. அதன் பின் 17 ஆண்டுக்கு பின் இப்போது ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் நள்ளிரவுடன் அமெரிக்காவின் நிதி ஆண்டு முடிகிறது. நடப்பு நிதி ஆண்டுக்கான நிதியை நாடாளுமன்றம் ஆளும் ஜனநாயக கட்சிக்கும், எதிர்கட்சியான குடியரசு கட்சிக்கும் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நாடாளுமன்றத்தில் நீடித்த பெரும் இழுபறிக்கு பின் அரசு அலுவலகங்களை இழுத்து மூடும் முடிவுக்கு அதிபர் ஒபாமா தள்ளப்பட்டார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, நடுத்தர, ஏழைகளுக்கான புதிய சுகாதார திட்டத்தை கொண்டு வர உள்ளார். சாதாரண மக்கள், இந்த சுகாதார திட்டத்தில் சேர அரசே அவர்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமிய தொகையை அளிக்கும். இந்த திட்டம் மூலம் ஆளும் ஜனநாயக கட்சிக்கு செல்வாக்கு கிடைத்து விடும் என்று நினைப்பதால் குடியரசு கட்சி ஏற்கனவே எதிர்த்துவருகிறது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவுடன் நிதி ஆண்டு முடிவடைவதால் நடப்பாண்டுக்கான நிதியை நாடாளுமன்றம் ஒதுக்கி அனுமதிக்க வேண்டும். இதற்கான அவசர நிதி மசோதாவை அங்கீகரிக்க வேண்டும். நேற்றுமுன்தினம் நாடாளுமன்றம் பிற்பகலில் கூடியது. சுகாதார திட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்; ஓராண்டு தள்ளி வைக்கலாம் என்று குடியரசு கட்சி பிடிவாதம் பிடித்தது. ஆனால், அதிபர் ஒபாமா இதற்கு மறுத்து விட்டார்.
பரபரப்பு அதிகரிப்பு: நள்ளிரவு நெருங்க நெருங்க பரபரப்பு கூடியது. காரணம், நாடாளுமன்றம் மசோதாவை அங்கீகரித்தால் தான் அரசு கஜானாவில் இருந்து புதிய நிதி ஆண்டுக்கான நிதியை எடுக்க முடியும். சுகாதார திட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கூறி அதை ஓட்டெடுப்புக்கு விட நிர்பந்தித்தது. இதில் பிரதிநிதிகள் சபையில் (நம் மக்களவை போன்றது) எதிர்கட்சியான குடியரசு கட்சிக்கு பலம் அதிகம். ஓட்டெடுப்பில் குடியரசு கட்சியினர் 228 , 221 என்ற ஒட்டு கணக்கில் தீர்மானத்தை வெற்றியடையச் செய்தனர்.
எனினும், செனட் (மாநிலங்களவை போன்றது)டில் ஆளும் ஜனநாயக கட்சிக்கு பலம் அதிகம். அங்கு இந்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு, 54 , 46 ஓட்டு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து குடியரசு கட்சி எம்பிக்களுக்கு கடுப்பு அதிகமானது. பட்ஜெட் நிதி அங்கீகாரம் பெற பேச்சு நடத்தி சுகாதார திட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால், அங்கீகரிக்க மாட்டோம் என்பது போல நடந்து கொண்டனர். ஆனால், அதிபர் ஒபாமா பணிய தயாரில்லை. ‘நீங்கள் ஒப்புதல் தராவிட்டால் மக்களிடம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அரசை இழுத்து மூட நேரிடும்’ என்று எச்சரித்ததுடன், தன் அமைச்சர்களுக்கு அவசர உத்தரவுகளை பிறப்பித்தார்.
நள்ளிரவு தாண்ட 25 நிமிடம் இருந்தபோது, மீண்டும் பேச குடியரசு கட்சி எம்பிக்கள் ஒப்புக்கொண்டனர். செனட் சபைக்கு அந்த தகவல் போவதற்குள் நள்ளிரவு தாண்டிவிட்டது. இதையடுத்து அரசு அவசர நடவடிக்கைகளை அமல்படுத்த துவங்கியது. இதன் விளைவாக பல அதிரடி முடிவுகள் அதிகாலையில் அமல்படுத்தப்பட்டன. அரசு அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டன. முதியோர் இல்லங்கள் இயங்குவது தடை பட்டது. அரசு நடத்தும் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு பூங்காக்கள், மியூசியங்கள் மூடப்பட்டன. இதனால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படும்; பங்குசந்தை தடுமாறும். மற்ற நாடுகளிலும் பாதிப்பு ஏற்படும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.
அரசியல் நாடகம்
அடுத்த சில மாதங்களில் பிரதிநிதிகள் சபை தேர்தல் நடக்கிறது. அதில் குடியரசு கட்சியை தோற்கடித்து அதிக இடங்களை பிடிக்க வேண்டும் என்பது ஒபாமா திட்டம். அதற்கான முதல் வெற்றி இது. அரசு மூடப்பட்டதால் ஏற்படும் விளைவுகளுக்கு எதிர்கட்சிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். குடியரசு கட்சி மீது மக்கள் வெறுப்பு அதிகரித்தால் தேர்தலில் அதிக இடங்களை நாம் பிடிக்க முடியும்.
இதுவரை பிரதிநிதிகள் சபையில் பலம் இல்லாமல் இருந்த நிலையை மாற்றி விடலாம் என்பதே ஒபாமா திட்டம். இந்த நாடகத்தில் அரசு ஊழியர்களை பக¬டைக்காயாக்கி விட்டார். சுகாதார திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போய், இந்த நாடகத்தில் குடியரசு கட்சியினர் எக்குதப்பாக சிக்கிவிட்டனர் என்பதே அரசியல் ஆய்வாளர்கள் கணிப்பு.
எதெல்லாம் பாதிக்கும்?
அரசு ஊழியர்கள்: நேரடி அரசு ஊழியர்கள் 8 லட்சம் பேர் உள்ளனர். பகுதி நேர, தற்காலிக என மொத்தம் 10 லட்சம் பேர் வேலைக்கு ஆபத்து. பிரச்னை முடியும் வரை சம்பளம் வராது. வெள்ளை மாளிகையில்: அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் 1265 ஊழியர்களுக்கு தற்காலிக விடுப்பு அளிக்கப்படும். வெறும் 436 பேர் மட்டும் பணியாற்றுவர். அதிலும் அதிபருக்கு வெறும் 15 உதவியாளர்கள் மட்டும் இருப்பர்.
முதியோர் காப்பகங்கள்: முதியோர் காப்பகங்கள் மூடப்படும்; எனினும் அவர்களின் அத்தியாவசிய தேவைகள் கவனிக்கப்படும். நோயாளிகளுக்கு சிக்கல்: அரசு மருத்துவமனைகளில் புதிய நோயாளிகள் அனுமதிக்கப்பட மாட்டர். புதிய சுகாதார திட்டம் நேற்று முதல் அமலாக இருந்தது. ஆனால் தடை பட்டதால் அதன் 40 ஆயிரம் ஊழியர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டனர்.
மருந்துகள் தடைபடும்: புதிய மருந்துகளை அங்கீகரிப்பது அமெரிக்க மருந்து ஆணையம். அதன் 55 சதவீத ஊழியர்களுக்கு விடுப்பு தரப்பட்டுள்ளது. அதனால் புதிய மருந்துகள் வெளியாவது தடைபடும்.
உளவுத்துறையில்: உளவு வேலையில் ஈடுபடுவோர் பல ஆயிரம் பேருக்கு அரசு ஊதியம், சலுகை தருகிறது. அது தடைபடும். உளவு பணிகள் பாதிக்கப்படும்.
தேசிய பூங்காக்களுக்கு பூட்டு: நியூயார்க் உட்பட பல பகுதிகளில் அரசு பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்படுகின்றன. ஒரு நாளைக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் வருகின்றனர்; 3 கோடி டாலர் வருமானம் கிடைக்கும். ஆனால் பூங்காக்களை பராமரிக்கும் ஊழியர்கள் விடுப்பு எடுப்பதால் மூடப்பட்டன.
வரி வருவாய் வராது: வருமான வரி வசூலிக்கும் பணியில் உள்ள ஒரு லட்சம் ஊழியர்கள் பணிக்கு வராததால் வரி வசூல் பணிகள் பாதிக்கப்படும். நீதித்துறையில்: கோர்ட் உட்பட நீதித்துறை அலுவலகங்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது. அதனால் கோர்ட் பணிகள் ஸ்தம்பிக்கும். நினைவகங்கள் மூடப்படும்: வாஷிங்டனில் ஆபிரகாம் லிங்கன் நினைவகம், தேசிய வனவிலங்கு பூங்கா, ஸ்மித்சோனியன் மியூசியம், தேசிய காப்பகங்கள் காலவரையற்று மூடப்படும்.
எதெல்லாம் பாதிக்காது?
* ராணுவம்: ராணுவம் பாதிக்காது; ராணுவத்தினருக்கு சம்பளம், சலுகைகள் கிடைக்கும். ஆனால், 8 லட்சம் சிவில் பணியாளர்களில் பாதிப்பேர் விடுப்பில் அனுப்பப்படுவர்.
* பாஸ்போர்ட்: விமான, ரயில் போக்குவரத்து பணிகள் பாதிக்காது. பாஸ்போர்ட், விசா பணிகளில் பாதிப்பு வராது.
* கோர்ட்கள்: சுப்ரீம் கோர்ட் மற்றும் கீழ் கோர்ட்கள் விசாரணை பாதிக்காது; ஆனால், ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கும்.
எக்ஸ்ட்ரா தகவல்
இதற்கு முன் 1995, 96ல் அதிபர் கிளின்டன் ஆட்சி காலத்தில் இப்படி ‘அரசு மூடல்’ நிலை ஏற்பட்டது. அப்போது 21 நாட்கள் அரசு பணிகள் முடங்கின. இந்த முறை வாரக்கணக்கில் நீடிக்குமா இந்த முடக்கம் என்பதே கேள்வி. அதுவரை வாரத்துக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
0 comments: